top of page
Writer's pictureperiyanayagam24

9 வயதில் 14 உலக சாதனைகள்



நெல்லை அருகே உள்ள வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் கார்த்திக்கேயன் – தேவிபிரியா தம்பதியரின் 8 வயது மகள் பிரிஷா. இவர் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தனது 1 வயதில் இருந்தே தன்னுடைய பாட்டி மற்றும் தாயிடம் இருந்து யோகாசனங்களை கற்று வந்துள்ளார்.

5 வயதில் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய சர்வதேச அளவிலான யோகாசனப் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றுள்ளார். இதுவரை 100க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.

கண்டபேருண்டாசனத்தை 1 நிமிடத்தில் 16 முறைகள் விரைவாக செய்து முதல் உலக சாதனையும், லோகஸ்ட் ஸ்கார்ஃபியன் போஸ் யோகாசனத்தை 3.02 நிமிடத்தில் செய்து 2வது உலக சாதனையும், ராஜகபோட்டாசனத்தை 5.13 நிமிடத்தில் செய்து 3வது உலக சாதனையும் புரிந்துள்ளார்.

2018ல் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகாசனப் போட்டியில் தங்கம் வென்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

பல்வேறு தங்கப்பதக்கங்களை வாங்கியது மட்டுமின்றி யோகா ராணி, யோகா கலா, யோகா ஸ்ரீ, யோகா சாதனா, யோகா நட்சத்திரா, சாதனை செல்வி, இளம் சாதனையாளர், யோகா செல்வி, யோகா லிட்டில் ஸ்டார் அவார்டு போன்ற பல்வேறு பட்டங்களையும்

இந்த நிலையில் கடந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் அன்று நீச்சல் குளத்தில் நீச்சலுடன் கூடிய வாமதேவ ஆசனம், ஏக பாத வாமதேவ ஆசனம், பத்மாசனம், குப்தபத்மாசனம், சுப்த பத்மாசனம், நீருக்குள் யோகாசனம் உள்ளிட்ட 8 உலக சாதனையை ஒரே நாளில் நிகழ்த்தினார்.

யோகாசனத்தை தண்ணீருக்கு வெளியே பலர் செய்துள்ள நிலையில், மிகவும் சிறு வயதில் தண்ணீருக்குள் இருந்தபடியே செய்து சாதனை படைத்தார்..

வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று வேலூரில் டாக்டர் பட்டம் பெறுகிறார்.தனது மகள் படைத்த சாதனைகளைவிட வேறு பெருமை மற்றும் சந்தோசம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கின்றார் பிரிஷாவின் தாய் தேவி பிரியா.

11 views0 comments

Comments


bottom of page