top of page
Writer's pictureperiyanayagam24

மதுரையை எரித்த கற்புக்கரசி கண்ணகி பற்றி!


சங்ககால வரலாற்றில் கண்ணகி என்னும் பெயரில் இரண்டு பெண்கள் காணப்படுகின்றனர்.

· கோவலன் மனைவி கண்ணகி

· பேகன் மனைவி கண்ணகி

கள் போல் மயக்கும் சிரிப்பை உடையவள் என்னும் பொருள் விளங்கும்படி, 'கண்ணகி' என்றனர். கண்+நகி என்று பிரித்து சிரிக்கின்ற - மலர்ந்த கண்ணைக் கொண்டவள் என்றும் பொருள்காண்பர்.


மதுரையை எரித்த கற்புக்கரசி கண்ணகி

மதுரையை எரித்த கற்புக்கரசி கண்ணகி பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. தமிழர்களின் வரலாறு என்று வரும்போது அதில் கண்ணகியை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. சுருக்கமாக இந்த உலகில் கடைசி தமிழன் இருக்கும் வரை கண்ணகியின் பெயர் மறையாது. மதுரையை எரித்ததால் மட்டும் கண்ணகியின் பெயர் வரலாற்றில் எழுதப்படவில்லை. அதற்கு மேலும் பல காரணங்களும், சிறப்புகளும் இருக்கிறது.

கண்ணகியின் கற்பொழுக்கம் பற்றி நாங்கள் கூறித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமென்றில்லை. கண்ணகியின் பாத்திரம் என்பது ஒட்டுமொத்த பெண்களின் சக்தி, தைரியம், பதிபக்தி ஆகியவற்றின் மொத்த உருவமாக கருதப்படுகிறது. தவறிழைக்காத தன் கணவனுக்கு தவறான தண்டனை கொடுத்ததற்காக மதுரையை எரித்த கண்ணகி அதற்கு பின் எங்கே சென்றார் என்ன ஆனார் என்பது பலருக்கும் விடை தெரியாத கேள்வியாக உள்ளது. அந்த கேள்விக்கான விடைதான் இந்த பதிவு.

சிலப்பதிகாரம்


தமிழகத்தின் ஐம்பெரும் காப்பியங்களுள் முதன்மையானது இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம். இதன் முதன்மை கதாபாத்திரங்கள் கண்ணகி, கோவலன் மற்றும் மாதவி ஆவர். சிலம்பு மற்றும் அதிகாரம் இணைந்து சிலப்பதிகாரமாய் ஆனது. சிலம்பினால் உண்டான கதை ஆதலால் சிலப்பதிகாரம் என பெயர்வைக்கப்பட்டது. மற்ற நூல்களை போல் கடவுள்களை வாழ்த்தாமல் கோவலன், கண்ணகி போன்ற சாதாரண மனிதர்களை வைத்து பாடப்பட்டதால் இது குடிமக்கள் காப்பியம் என்றும் அழைக்கப்படுகிறது.

கண்ணகி


பெண்மைக்கே உண்டான அச்சம், அறிவு, தைரியம், பக்தி என அனைத்து அம்சங்களும் பொருந்திய கண்ணகி தன் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கும்போது எப்படி அல்லலுற்றாள், திசைமாறிய கணவன் மனம் திருந்தி வரும்போது எவ்வாறு அவனை ஏற்றுக்கொள்கிறாள், தவறான தீர்ப்பால் தன் கணவன் கொல்லப்பட்ட போது நாடாளும் மன்னனையே எவ்வாறு எதிர்கொண்டு தன் கணவன் குற்றமற்றவன் என நிரூபிக்கிறாள், தவறான தீர்ப்பை வழங்கிய மன்னனுக்கு என்ன தண்டனை வழங்குகிறாள் என்று படிப்போர் மனம் உருக படைத்திருப்பார் இளங்கோவடிகள். மாட்சிமை பொருந்திய ஒரு பெண்ணால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை கண்ணகி பாத்திரம் வழியே மிக அழகாக எடுத்துரைத்திருப்பார். இத்தகைய சிறப்புகளால்தான் கண்ணகி இன்றும் அனைவராலும் போற்றப்படுகிறார்.

மதுரையில் கண்ணகி


பெரும்செல்வந்தர்களான கோவலனும், கண்ணகியும் அனைத்தையும் இழந்ததால் பூம்புகார் விட்டு புது வாழ்வை தொடங்குவதற்காக மதுரை நோக்கி வருகின்றனர். கண்ணகி விலைமதிப்பற்ற தன் கால் சிலம்பை கொடுத்து விற்றுவரும்படி கோவலனை அனுப்பி வைத்தாள். கோவலன் விலைமதிப்பற்ற சிலம்பொன்றை விற்க போவதை அறிந்த அரண்மனை பொற்கொல்லன் பாண்டிமாதேவியின் சிலம்பை திருடிவிட்டு அந்த பழியை கோவலன் மீது சுமத்திவிட்டான். பாண்டிய மன்னனோ கொல்லனின் கூற்றை நம்பி சிறிதும் விசாரிக்காமல் கோவலனுக்கு மரண தண்டனை விதித்துவிட்டான்.

அரசவையில் கண்ணகி


தன் கணவன் பொய்யான குற்றச்சாட்டால் இறந்ததை அறிந்த கண்ணகி பெருந்துயருற்றாள். தன கணவன் குற்றமற்றவன் என்பதை இந்த உலகிற்கு நிரூபிக்க தன் ஒற்றை கால் சிலம்புடன் அரசவை நோக்கி சென்றாள். அதுவரை பூவை விட மென்மையாய் இருந்த கண்ணகி இப்போது கோபத்தீயில் கொழுந்துவிட்டு எரியும் தீச்சுடரென அரசன் முன் நின்றாள். சரியாக விசாரிக்காமல் தன் கணவனை கொன்றது அநீதி என்று மன்னனுடன் வாதாடினாள். கள்வனை கொள்வது அநீதி அன்று அரசநீதி என்று மன்னன் கூறினான். நீ கூறியது சரிதான் ஆனால் என்னுடைய சிலம்பின் பரல்கள் மாணிக்கணங்களே நேரு கூறினால் மன்னரோ பாண்டிமாதேவியின் சிலம்பு முத்து பரல்களை கொண்டது என்று கூறினான். மன்னனின் ஆணைக்கிணங்க கோவலனிடம் இருந்து கைப்பற்றிய சிலம்பை அரசவை கொண்டுவர

வென்ற நீதி


அரசவை கொண்டுவரப்பட்ட சிலம்பை அவையோர் முன் உடைத்தால் கண்ணகி. அதிலிருந்து மாணிக்க பரல்கள் சிதறி காண்போர் கண்ணை கூசும்படி செய்தது. தான் இழைத்த அநீதி கண்டு அதிர்ச்சியுற்ற மன்னன் நீதி தவறிய என் ஆயுள் இன்றோடு அழியட்டும் என்று கூறி தன் சிம்மாசனத்தில் இருந்து கீழே வீழ்ந்து இறந்து போனான். கணவனை இழந்து கண்ணகி படும் துயர் கண்டு மன்னனின் மனைவியும் தன் கணவன் பாதத்திலியே உயிரை விட்டார்.

கண்ணகியின் கோபம்

மன்னனின் மறைவும் அவர் மனைவியின் கற்பு நெறியும் கண்ணகியை அதிர்ச்சியடைய வைத்தது. எனினும் கோபம் அடங்காத கண்ணகி மன்னன் மட்டுமின்றி தனக்கு அநீதி இழைத்த இந்த மதுரையே நகரமே தீக்கிரையாகட்டும் என்று சாபம் கொடுத்தால். கற்பொழுக்கத்தில் புனிதவாதியான கண்ணகியின் சாபம் உடனே பழித்தது. மதுரை மாநகரமே பற்றி எரிந்தது. கண்ணகியின் கற்புநெறியையும், கோபத்தையும் கண்ட வருண தேவனும், வாயு தேவனும் மதுரையை விட்டு அகன்றனர். எரியும் மதுரையின் தெருக்களில் காளியின் மறுஉருவமாய் தலைவிரி கோலத்துடன் கால் போன போக்கில் நடந்தால் வீரபத்தினி கண்ணகி.

அணையா தணல்


மதுரையை எரித்தபின் எங்கே செல்வதென்று தெரியாத கண்ணகி கால்போன போக்கில் தாமரை பாதத்தில் குருதி வழிந்தோடுவது கூட அறியாமல் நடந்து சென்றுகொண்டே இருந்தால். பதினான்கு நாட்கள் நடந்த பிறகு சேரநாட்டு எல்லையில் இருந்த கொடுங்காவலுர் என்ற ஊருக்கு அருகே உள்ள வன்னாத்தி பாறையை சென்றடைந்தார். அங்கே இருந்த குன்றக்குறவர்களிடம் தனக்கு நேர்ந்த அநீதியை கூறி அழுதார். அவரின் விழிகளில் இருந்து விழுந்த கண்ணீர்துளிகள் அவரின் கோபத்தணலை அணைத்தது. அந்த குன்றக்குறவர்களின் நடனம் அவரின் மனக்காயங்களுக்கு ஆறுதலாய் இருந்தது. அதன்பின் கண்ணகி அங்கேயே தங்கிவிட்டார்.

கண்ணகியின் முடிவு


சில நாட்களுக்கு பிறகு வானில் தோன்றிய வெளிச்சத்தில் இருந்து இறங்கி வந்த கோவலன் கண்ணகியை தன்னுடன் தேவர்கள் உலகத்திற்கு அழைத்துச்சென்று விட்டார். பூமியில் வாழமுடியாத மகிழ்ச்சியான வாழ்வு தேவர்கள் உலகத்தில் கண்ணகிக்கு கிடைத்தது. இதனை பார்த்து ஆச்சரியமடைந்த மக்கள் அந்நாட்டின் அரசன் சேரன் செங்குட்டவனிடம் இந்த அதிசயத்தை கூறினர். இதனை கேட்டு பரவசமடைந்த சேரன் செங்குட்டுவன் அதே இடத்தில் கண்ணகிக்கு ஒரு கோவிலை கட்டினார்.

கண்ணகிக்கு கோவில்


கண்ணகி கோவலனுடன் வானுலகிற்கு சென்ற இடத்தில கட்டப்பட்டதுதான் மங்களா தேவி கண்ணகி கோவில். இப்போதும் தமிழக-கேரள எல்லையான இடுக்கி மாவட்டத்தில் இந்த கோவில் உள்ளது. கண்ணகிக்கு அவர் ஆசைப்பட்ட வாழ்க்கை இங்கிருந்து கிடைத்ததால் இங்கே வேண்டிக்கொள்ளும் அனைத்தும் நிறைவேறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. கண்ணகி நடந்து வந்த பாதையாக கருதப்படும் ஒரு ஒற்றையடி பாதை 6கிமீ தூரத்திற்கு இங்கே உள்ளது. இன்றும் பக்தர்கள் சின்ஹா பாதை வழியாக சென்றுதான் கண்ணகியை தரிசிக்கின்றனர். வருடம்தோறும் சித்ராபௌர்ணமி அன்று மட்டுமே பக்தர்கள் இந்த கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

பொதினி என்று சங்கக் காலத்தில் வழங்கப்பட்ட பழனிமலைப் பகுதியைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய நாடு வையாவி நாடு. இதனை ஆண்ட சங்க கால அரசர்களுள் ஒருவன் 'வையாவிக் கோப்பெரும் பேகன்' இவனது மனைவியின் பெயர் கண்ணகி ஆகும். சிலப்பதிகாரக் கோவலனைப் போலவே இவனும் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்துவந்தான். புலவர்கள் பலர் இவனுக்கு அறிவுரைக் கூறித் திருத்தியிருக்கிறார்கள். அரிசில் கிழார்],கபிலர் ,பரணர், பெருங்குன்றூர் ,கிழார், ஆகிய புலவர்கள் கண்ணகி காரணமாக வையாவிக் கோப்பெரும் பேகனைப் பாடி அறிவுரைக் கூறியுள்ளனர்.

18 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page